சமீபத்தில் வாட்சாப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஃபாஸ்டாக் மோசடி என்று பொருள்படும் வகையில், சில நபர்கள் ஸ்மார்ட்வாட்ச் முதலான கேட்ஜெட்களின் உதவியோடு டிஜிட்டல் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் மோசடி செய்ய முடியும் என மக்களைப் போலியாக எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எனினும், இந்த வீடியோவும், அதில் கூறப்படும் கருத்துகளும் பொய்யானவை ஆகும். ஃபாஸ்டாக் போன்ற தொழில்நுட்பங்களின் பரிவர்த்தனைகள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய விதத்திலான இணைய வசதியின் கீழ் நடைபெறுபவை அல்ல. 


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் பி.ஐ.பி சார்பில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், `வைரல் வீடியோ ஒன்றில் வாட்ச் முதலான கேட்ஜெட்கள் மூலமாக வாகனங்களில் இருக்கும் ஃபாஸ்டாக் ஸ்டிக்கர்களை ஸ்வைப் செய்ய முடியும் எனக் கூறப்பட்டு, மக்களின் ப்ரீபெய்ட் வாலட்களில் இருந்து பணத்தைத் திருட முடியும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ போலியானது.. அப்படியான பரிவர்த்தனைகள் சாத்தியமல்ல. ஒவ்வொரு டோல் ப்ளாசாவுக்கும் தனித்துவமான எண் கொடுக்கப்பட்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளது. 







மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இந்த ஃபேக்ட் செக் பதிவில் ஃபாஸ்டாக் ஸ்டிக்கர் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டோல் ப்ளாசாவுக்கும் தனித்துவமான எண் வழங்கப்பட்டு அது குறிப்பிட்ட வங்கியுடனும், அது இடம்பெற்றுள்ள பகுதிக்குத் தனியாக வழங்கப்பட்டிருக்கும் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இவை மொத்தமாக தேசிய மின்னணு கட்டண வசூல் அமைப்பில் பதிவேற்றப்படுகின்றன. 


இந்தப் பதிவில், `இந்தப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பான இணைய ப்ரொடோகால்களில் நடைபெறுகின்றன. எனவே முறையான பாதுகாப்பு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண