கன்னியாகுமரியில் கல்லூரி சீருடையில் காதலனை சந்திக்க வந்த மாணவியை போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபகாலமாக காதல் என்ற பார்வை இன்றைய இளம் தலைமுறையினரிடம் மாறிவிட்டது என சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளது.  இந்த விவகாரத்தில் எல்லாரையும் குறை சொல்ல முடியாது என்றாலும் சிலர் செய்யும் செயல்கள் அனைவர் மீதான பார்வையையும் மாற்றி விடுகிறது. இப்படியான நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.


அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். இவரும் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த இளைஞரின் பெற்றோர் வேலைக்கு சென்று விடும் நிலையில், அப்பெண் அடிக்கடி அந்த வீட்டுக்கு பகல் நேரத்தில் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை நீண்ட நாட்களாக அக்கம் பக்கத்தினர் கண்காணித்து வந்தனர். அந்த இளைஞரின் வீட்டுக்கு கல்லூரி சீருடையில் தான் அந்த மாணவி வருவாராம். 


இப்படியான நிலையில் நேற்று அந்த மாணவி சீருடையில் காதலனை காண வந்துள்ளார். கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை கவனித்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். யார் என்று கதவை திறந்து பார்த்த அந்த காதல் ஜோடிக்கு வெளியே போலீசார் நிற்பதை கண்டு அதிர்ச்சி காத்திருந்தது. 


இதனையடுத்து போலீசார் அம்மாணவியை தனியாக அழைத்து விசாரித்தனர். இதில் சம்பந்தப்பட்ட இளைஞரும், தானும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இப்படி கல்லூரி சீருடையில் ஒரு வீட்டுக்கு தனிமையில் செல்வது தவறான செயல் என கண்டித்த போலீசார், இனிமேல் இப்படி செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.


இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கும் தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களும் அப்பெண்ணை கண்டித்துள்ளனர். மேலும்   ஏற்கனவே இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளோம். மாணவி கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமணம் நடக்கவுள்ளதாக போலீசாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: Crime: ஐசியுவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன?