Crime: ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


ஐசியுவில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  அதாவது, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் 24 வயதான இளம்பெண்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அங்கு வேலை பார்க்கும் மருத்துவ உதவியாளர் ஒருவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் சிராக் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அதிகாலை 4 மணியளவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அவசர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, மயக்க நிலைக்கு சென்றபின் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  


சிக்கிய  மருத்துவ உதவியாளர்:


இதன்பின் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் அடித்த பிறகே அவர் சுயநினைவுக்கு திரும்பினார்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யாதவை நாங்கள் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றார். 


முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை  திரும்ப பெறக் கோரி மிரட்டி இருக்கிறார்.


இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே,  யாதவ் தனது கூட்டாளிகளுடன் பெண்ணை துப்பாக்கில் சுட்டுள்ளார். காயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, போலீசார் ராஜேந்திர யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Crime: இளம்பெண் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. குற்றவாளிக்கு நேர்ந்த கதி..


கொடூரம்! வீடு புகுந்து 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் - ராஞ்சியில் அதிர்ச்சி