இந்திய மக்களில், 7.3 சதவீதம் பேர், 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய் நிகர் நாணயங்கள் வைத்துள்ளனர். இதன் வாயிலாக, சர்வதேச அளவில் இந்தியா 7-வது இடம் வகிக்கிறது. 


கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதன் விபரம் பின்வருமாறு : கடந்த 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், 15 நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.


இதில், கிழக்கு ஐரோப் பிய நாடான உக்ரைன் முன்னிலை வகிக்கிறது. இங்கு வசிக்கும் 12.7 சதவீத மக்கள் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர். ரஷ்யாவில் 11.9 சதவீ தமும், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீத மக்களும் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர்.


அமெரிக்காவில், 8.3 சதவீத மக்கள், 'டிஜிட்டல்' கரன்சி வைத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில், 7.3 சதவீதம் பேர் மெய்நிகர் நாணயம் வைத்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த காலத்தில், கிரிப்டோகரன்சி யின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ளது. 


கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?


கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். இதனால் அந்த விஷயங்கள் இது மிகவும் பயனளிக்கிறது. மேலும் இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோகரன்சிகளை முதலில் டாலர் கொண்டு வாங்க முடியும். குறிப்பாக பிட்காயின் கரன்சியை டாலர் வைத்து வாங்கலாம். இதர கிரிப்டோ கரன்சிகளை பிட்காயின் வைத்து வாங்கலாம். முதலில் கிரிப்டோ கரன்சி வாங்க இணையத்தில் வாலெட் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். 


கிரிப்டோ கரன்சி எப்படி செயல்படுகிறது?


கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது.  கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும். ஒரு கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து நௌன்ஸ், கிரிப்டோ ஹஸ் உள்ளிட்டவையும் சேர்த்து உருவாக்கப்படும். இவை ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியுடனும் இருக்கும். இது பொது ரிஜிஸ்டரை பயன்படுத்துவதால் இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது யாரை வாங்குகிறார்கள், யார் விற்கிறார்கள் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்திற்கு சற்று ஒட்டிய மாதிரி இருப்பது தான் கூகுள் டாக்ஸ். கூகுள் டாக்ஸ் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் அது இயங்கும் முறை பிளாக்செயின் முறை போல கிட்டத்தட்ட இருக்கும். 


அதாவது ஒரு கூகுள் டாக்ஸ் ஃபைலை நாம் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும்போது, அதை அனைவரும் ஒரே சமயத்தில் மாற்றமுடியும். அந்த மாற்றங்கள் அனைத்தும் ஃபைலில் தெரியும். நாம் அனுப்புவது உண்மையான ஃபையில் தானே தவிர அதின் நகல் அல்ல. அதேமாதிரி தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். ஆனால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகிராஃபி என்ற பாதுகாப்பு விதிகள் கூடுதலாக இருப்பதால் இது சற்று வேறு மாதிரியாக இயங்கும். 


கிரிப்டோகரன்சி ஏன் பிரபலமாக உள்ளது?


கிரிப்டோ கரன்சி உலகளவில் மிகவும் பிரபலமாக ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை 



  • பிட்காயின் கரன்சியை எதிர்காலத்தில் இருக்க போகும் முக்கியமான க்ரிப்டோகரன்சியாக பல நாட்டினர் கருதுகின்றனர். அதனால் அதன் விலை மதிப்பு அதிகரிப்பதற்குள் பலர் தற்போது வாங்கி அடுக்கிக்கொண்டு வருகின்றனர். 

  • இந்த விதமான கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் தலையிடாது என்பதால் இதன் மதிப்பை பணவீக்கம் வந்தால் குறைக்கமுடியாது. 

  • இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.

  • கிரிப்டோகரன்சி எந்தவித வட்டியும் இல்லாமல் மதிப்பு உயர்வதால் அதனை பிற்காலத்தில் ஒரு பெரிய கரன்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கருதி சிலர் வாங்குகின்றனர்.