பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண் வழக்கறிஞர் பெண் ஒருவர் கடந்த 9ஆம் தேதி பெங்களூரு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். இதற்காக இரவு ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் திரும்பியுள்ளார். அந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தப் போது அவர் தூங்கி கொண்டிருந்தப் போது அதே பெட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. 


அந்த சமயத்தில் அந்த நபரின் அத்துமீறலை அப்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த போது இது தொடர்பாக பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தப் புகாரை அரக்கோணம் காவல்துறையினர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர்.




இந்தப் புகாரை எடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் கந்தன்(26) மற்றும் அவர் பெங்களூருவிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு பாலியல் தொல்லை நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேருந்து ஒன்றில் பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ரயிலில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க:இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பணம் பறித்த காதல் மன்னன் கைது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண