உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள், பல்கலைகழகத்தில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே சேர்த்துக்கொள்ள ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையே நடைபெற்று வரும் போரால் உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயின்று வந்த இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
உக்ரைனில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேள்வி எழுந்ததால் அவர்களை இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தினர். இந்த சூழலில், நாடு திரும்பிய மாணவர்களை கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.