மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட 4 இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த 6 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு - 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை


 







கடந்த 2011-ஆம் ஆண்டு மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக  சாகுல் ஹமீது, அல்ஹஜ், ரபீக் ராஜா, ஷாயின்ஷா ஆகிய 4 நபர்களை போலீஸார் கைது செய்தனர். சிறப்பு படை உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன் உள்ளிட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் கைது செய்த 4 பேரையும் செல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தண்ணீர், உணவு தராமல் சித்தரவதை செய்துள்ளனர். சாகுல் ஹமீது உள்ளிட்ட 4 நபரும் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல் நிலையத்தில் தங்களை துன்புறுத்தியதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்திருந்தனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 




 


கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!


இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன்,  காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.


” இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ” - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!