Madurai: ஐ.டி. ரெய்டில் சிக்கிய சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன்: எங்கெல்லாம் சோதனை !

சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது .

Continues below advertisement

மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. இந்நிலையின் இன்று சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Continues below advertisement

மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். மேலும், கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.  பல்வேறு படங்களுக்கு அன்புசெழியன் பைனான்ஸ் செய்துள்ளார். இவர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
 
 
இந்நிலையில், அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அவரது உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. 

 
மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்திலும்   மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
Continues below advertisement
Sponsored Links by Taboola