சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அடுத்த கச்சநத்தம் கிராமத்தில் 4 நபர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சநத்தம் கிராமத்தில் 2018 மே 28- ஆம் தேதி ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன், தனசேகரன் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தொடர்பாக பழையனூர் போலீசார் 33 பேர் மீது வழக்கு பதிந்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நான்கு ஆண்டு நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 நபர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 31 பேர் மீது கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு, கச்சநத்தம், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கிராமங்களுக்கு வரும் நபர்கள் விசாரிக்கப்பட்டனர். அதே போல் சிவகங்கை நீதி மன்றத்தில்லும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஒவ்வொரு நபர்களை விசாரித்து உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நான்கு வருடங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டதால், பெரும் பரபரப்பு எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். நீதிமன்ற வளாகத்திற்குள், வழக்கு தொடர்பான வழக்கறிஞரை தவிர யாரும் அனுமதிக்கப்பட வேண்டாம் என்றும் தீர்ப்பின் விவரம் ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை ஒருங்கிணைந்த எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்