வீட்டில் பணத்தை திருடிய பணிப்பெண்ணை கேமராவை வைத்து பிடித்துள்ளார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர்.


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் ஒரு டாக்டர் வீட்டில் வீட்டு வேலை செய்யும் 35 வயது பெண் ஒருவர் ரூ.6 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். கோவண்டியில் வசிக்கும் வித்யா காம்ப்ளே என்ற குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீசார்  கைது செய்துள்ளனர். அப்பெண் திருடப்பட்ட பணத்தை தனது காதலனுக்கு நகைகளை வாங்க பயன்படுத்தியுள்ளார்.


டாக்டர் குர்னீத் வாசன், கிளினிக் செண்டர் நடத்தி வருகிறார். அவர் சம்பாதித்த அனைத்தையும் வீட்டிற்கு கொண்டு வந்து அலமாரியில் வைத்திருப்பார். பின்னர், தனது வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வார்.


இந்தநிலையில், டாக்டர் வாசன் தனது அலமாரியில் 50,000 ரூபாய் பணத்தை வைத்திருந்தார். நவம்பர் 3 ஆம் தேதி, அந்த பணத்தில் இருந்து 10 கட்டுகள் காணாமல் போனதை அவர் கண்டுபிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து, வாசன் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணி பணத்தை திருடியதாக சந்தேகமடைந்து, பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் கேமராவை பொருத்தினார்.


இதன்பிறகு, கடந்த நவம்பர் 5 ஆம் தேதி பணிப்பெண் வீட்டுக்கு  வந்த பிறகு, டாக்டர் தனது குடும்பத்தினரை காலை உணவுக்காக வெளியே அழைத்துச் சென்றார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து குடும்பத்தினர் வீடு திரும்பினார்கள். அப்போது, அலமாரியில் வைத்திருந்த பண கட்டுகளை காணவில்லை. பின்னர், டாக்டர் வாசன், பணிப்பெண்ணிடம் பணத்தை திருடியதாகக் கூறப்படும் வீடியோவைக் காட்டினார். அதன்பிறகு பணத்தை திருடியதாக அப்பெண் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.




இதனைத்தொடர்ந்து. டாக்டர், கோவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பணிப்பெண் கைது செய்யப்பட்டார். விரிவான விசாரணையில் 2019-ம் ஆண்டும் இதேபோன்ற திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


பின்னர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, ​​அந்த பணத்தை அவரது காதலன் தங்க நகைகள் வாங்க பயன்படுத்தியது தெரியவந்தது. காதலனிடம் இருந்து 50 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியும், 24 கிராம் 33 கிராம் எடையுள்ள இரண்டு வளையல்களும் போலீசார் கைப்பற்றினார்கள்.


மேலும் செய்திகள் படிக்க: Delhi Violence: வேலையை விட்டு தூக்கிய முதலாளியம்மா: ஷாக் வைத்து கொன்ற டிரைவர்!


Watch Video| துணிக்கடைக்குள் புகுந்த பைக்.. சிதறிய வாடிக்கையாளர்கள்... வைரல் வீடியோ!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண