சமுக வலைதளங்களில் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பலவை வைரலாகுவதை அவ்வப்போது நம்மால் பார்க்க முடியும். விலங்குகள் மனிதனை கடிக்கும் காட்சிகள், விபத்தில் மயிரிழையில் தப்பிக்கும் நபர்கள், விபத்துக்குள்ளாகும் வாகனங்கள், கடல் வாழ் உயிரினங்களின் கொடூர தாக்குதல்கள் என நெஞ்சை பதறவைக்கும் வீடியோக்களை அதற்கு சான்றுகளாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  



Watch Video| துணிக்கடைக்குள் புகுந்த பைக்.. சிதறிய வாடிக்கையாளர்கள்... வைரல் வீடியோ!
 


அந்த வீடியோவில் ஒரு துணிக்கடை ஒன்றில், சில பெண்களும் ஒரு நபரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த வாலிபர் ஒருவர், அந்தக் கடைக்குள் வேகமாக புகுந்தார்.


கடையின் முன்பகுதியில் மோதிய அந்த வாலிபர் அங்கிருந்து கடைக்குள் தூக்கி வீசப்பட்டார். இதனை சற்று எதிர்பாரத வண்ணமாய் கடைக்குள் இருந்தவர்கள் அதிர்ந்து போய் நின்றனர். நல்ல வேளையாக அங்கிருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  


சரியாக 7 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை சமூகவலைதளவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் இந்த சம்பவம் 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நடந்துள்ளதாக அந்த கேமாராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.