Delhi Violence: வேலையை விட்டு தூக்கிய முதலாளியம்மா: ஷாக் வைத்து கொன்ற டிரைவர்!

ராகேஷ், தம்பதியிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ராகேஷ் மீது பல கருத்து வேறுபாடுகள், இருந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Continues below advertisement

வேலையை விட்டு தூக்கியதால் முன்னாள் முதலாளி மனைவியை ஷாக் கொடுத்து கொடூரமாக கொன்ற டிரைவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement

டெல்லியின் புராரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை பேராசிரியரின் மனைவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, ​​முதலில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மின்சாரம் பாய்ச்ச முயன்றது தெரியவந்தது. பக்கத்து வீட்டுப் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது நிலையைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொடூர கொலை வழக்கில், ஆத்திரத்தில் கொலையாளி இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அதன் பிறகு விசாரணையைத் தொடர்ந்தனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பேராசிரியரின் வீட்டில்  தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்த ராகேஷ் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


போலீஸ் விசாரணையில் டிரைவர் சொன்ன உண்மையைக் கேட்டு போலீஸாரும் திகைத்துப் போனார்கள். முதலாளியான தனது பேராசிரியர், பிங்கி என்ற பெண்ணை 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததாக  கூறிய டிரைவர், திருமணத்திற்குப் பிறகு பிங்கி தன்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாகவும்,  அப்போது இருந்து,  தன் வாழ்க்கை கெட்டுப்போனதாக உணர்ந்ததாகவும் டிரைவர் கூறினார்.

இதனால், அவரைக் கொல்ல முடிவு செய்த டிரைவர், திங்கள்கிழமை, அந்த பெண்ணின் கணவர் வீட்டை விட்டு வெளியே வந்ததை அறிந்து, பெண்ணை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார். அப்பெண் இறந்த பிறகும் வெறி அடங்காத நபர், பின்னர் பெண்ணின் உடலுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராகேஷை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மேலும், வாசிக்க: CMDA: சென்னைக்கு வெள்ளம் வந்தா மட்டும் நினைக்கு வரும் சி.எம்.டி.ஏ... யாருப்பா அது... என்னப்பா பிரச்சனை? 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola