சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் பள்ளியைச் சேர்ந்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் தனது தோழியுடன் சென்று வந்தார். இதில் அழகு நிலைய பெண் பொறுப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது உதவியுடன், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.





 


 





இது தொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லட்சுமி (45) உட்பட 4 பேர் மீது காரைக்குடி மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, லட்சுமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மன்ஸிலை தேடி வந்தனர். மன்ஸில் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான மன்ஸில்லை  கைது செய்தனர்.

 





இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார் அதில்..,” காரைக்குடியில் நடந்துள்ள இச்சம்பவம் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சில அரசியல் பிரபலங்கள் வழக்கிற்கு முட்டுக்கட்டை போடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே தமிழக முதல்வர் மற்றும் DGP இது தொடர்பாக நேரடி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.