உடல் எடைக் குறைப்பு இதுதான் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை நிலவும் பெரும் பிரச்சினை.
ஓபீஸிட்டி இன்றைய காலக்கட்டத்தில் பிரதான லைஃப்ஸ்டைல் நோயாகிவிட்டது. உடல் எடை கூடும்போது கூடவே சர்க்கரை நோய் தொடங்கி இதய நோய் வரை பல்வேறு நோய்களும் அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன.
இந்நிலையில், எடைக்குறைப்புக்கு முட்டையைப் பரிந்துரைக்கும் இந்த டயட்டைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.. முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, டைப் 2 சர்க்கரை நோயாளிகள் முட்டையை தவிர்ப்பது நல்லது என்றே பரிந்துரைக்கப்படுகிறது.
முட்டைகள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான். அதுமட்டுமல்லாமல் மிக எளிமையாக விதவிதமாக சமைக்கக்கூடியதும் கூட. சரி இந்த முட்டை என்ன மாயம் செய்யும் என்றறிவோம் வாருங்கள்.
குடைமிளகாய்: முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
மிளகு: முட்டையின் மீது மிளகைத் தூவுவதும் ஆரோக்கியமானதே. மிளகில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
தேங்காய் எண்ணெய்: எல்லா வகையான கொழுப்பும் கெட்டவை அல்ல. சோயா எண்ணெய்யில் உள்ள கொழிப்பு உடல் எடையை அதிகரித்தால், தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே அடுத்த முறை ஆமெல்ட் போடும்போது தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்துப் பாருங்கள். சுவையும், மனமும், பலனும் கூடுதலாக இருக்கும்.
ஆகையால் முட்டையுடன் இந்த உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டு உடல் எடையை எளிமையாக ஆரோக்கியமாக குறைக்க முயற்சிக்கலாமே. ஆரோக்கியமாக சாப்பிடுவோம். உடல் எடையை சீராக வைப்போம்.