இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளன. அந்த வகையில் தற்போது மீண்டும் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இம்முறை 16 வயது சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி 16 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் இரவு 8 மணியளவில் சாலையில் சென்றுள்ளார். அப்போது நியூ விஐபி சாலை அருகே ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் தனியாக வந்த இந்தச் சிறுமியை அவர்கள் துரத்த தொடங்கியுள்ளதாக கூறபடுகிறது. அதன்பின்னர் மற்ற இரண்டு நபர்களின் உதவியுடன் அந்த சிறுவன் சிறுமியை பிடித்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அச்சிறுமியை அருகே இருந்த ஒரு பழைய பஸ் பார்க்கிங்கிற்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க: ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் மீது 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


 


இந்த சம்பவத்திற்கு பிறகு விட்டிற்கு வந்த சிறுமி தன் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். இதையடுத்து அச்சிறுமியின் மாமா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிறுமி கூறிய இடம் மற்றும் அடையாளங்களை வைத்து காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வந்தனர். தீவிர சோதனைக்கு பிறகு அந்த சிறுவனை காவல்துறையினர் பிடித்துள்ளனர். மேலும் அவனிடம் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  




அத்துடன் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அவனுக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளதாக அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வதோதரா பகுதியில் இரவு 8 மணியளவில் இந்த குற்றச்சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒரு பழங்குடியின சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி அளிக்கும் வகையில் தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.  


மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை முயற்சி