இந்திய வனத்துறை அதிகாரியான சுரேந்தர் மெஹார் விலங்குகள் செய்யும் சுட்டித்தனமான செயல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளமான டிவிட்டரில் அவ்வபோது பதிவிடுவார். அது போல நேற்றைய தினம் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், மான் ஒன்று சிறிய சாலையை மிக உயரத்தில் தாவிக் கடந்து உள்ளது. அதனை பார்க்கும் போது மான் தாவுவது போன்று தெரியவில்லை. பறப்பது போன்றே தெரிகிறதாக பார்வையாளர்கள் ஷாக் ரியாக்சனோடு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெறும் 22 வினாடிகளே உள்ள இந்த விடியோவை 12 ஆயிரத்திற்கு அதிகமானோர் கண்டு ரசித்து உள்ளனர்.


அந்த வீடியோவில் சுரேந்தர் மெஹார் குறிப்பிட்டு உள்ளதாவது, “உயிர் வாழ்வது கூட சில சமயங்களில் தைரியமானதாகும். (Sometimes even to live is an act of courage) என்று எழுத்தாளர் லூசியஸ் அன்னியஸ் செனெகா -வின் வாகியத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.


 






மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. மான், ஆடு, மாடு விலங்குகள் போன்ற வகையைச் சேர்ந்தது. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளி மான், சருகு மான், சம்பார் மான், கவரி மான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா பகுதிகளிலும் வாழும் எல்க் என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப் பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மான் 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.


மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டு இருக்கும். கொம்புகள் கிளைப் போன்று இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் ஆகும். பெண் மானுக்கு சிறிய கொம்புகள் அல்லது கொம்புகள் இல்லாமலும் இருக்கும். அதனால் அதற்கு பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு குட்டிக்கு மான் மறி என்று பெயர்.


இந்தியாவில் நிறைய மலைப் பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.