குஜராத்தின் சூரத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 35 வயது திருமணமான பெண்ணை 23 வயது இளைஞர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சர்தானா காவல் துறையினர் நிலேஷ் லத்தியா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அப்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசிக்கிறார். இவருக்கும் மொட்டா வரச்சா பகுதியை சேர்ந்த லத்தியா என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த லத்தியா, அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண்ணின்  நிர்வாண புகைப்படங்களையும் எடுத்து பின்னர் அவரை மிரட்டுவதற்கு பயன்படுத்தினார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் படிக்க: Mumbai : “குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்” - ஆசைகாட்டி 75 பேரிடம் ரூ. 5 கோடி மோசடி செய்த மும்பை தம்பதி!


ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் 10 நாட்களுக்குப் பிறகு லத்தியா அந்தப் பெண்ணை மீண்டும் தொடர்புகொண்டார். அவர் தனது கோரிக்கையை நிராகரித்தால் சமூக ஊடகங்களில் தனது நிர்வாண புகைப்படங்களை பரப்புவேன் என்று மிரட்டினார். இந்த மிரட்டலின் பேரில், குஜராத்தின் பருச்சில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் பலமுறை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.


பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, அந்த பெண் காவல்துறையை அணுகி, லத்தியா மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதேபோல், மற்றொரு வழக்கில், பீகாரின் ஹாஜிபூர் நகரில் 60 வயது முதியவர் ஒருவர் தனது உறவினரின் மூன்றரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையின் தாய் காவல்துறையில் புகார் அளித்தபோது இது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, 60 வயதான குற்றவாளியை போலீஸார்  கைது செய்தனர். மேலும் படிக்க: Hyderabad : ‛கொலை.. கொலை...’ போலீசை வரவழைத்து அலர்ட் செக் செய்த இளைஞர் கைது!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண