போக்குவரத்து  தொழிலாளர்களின்   14 வது ஊதிய ஒப்பந்தம்  உடனே பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக   அரசை வலியுறுத்தி ஏஐடியூசி  சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை, அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு  2019 செப்டம்பர் மாதம் ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை பேசி முடிக்கப் படாமல் உள்ளது.  அடுத்த ஒப்பந்தம் நெருங்கி விட்ட நிலையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.




போக்குவரத்து  கழகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், வேலைப்பளு குறைக்கப்பட வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான பேட்டாவை உடனுக்குடன் வழங்க வேண்டும், பேருந்துகளுக்கு தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு  ஓய்வுகால பணப்பலன்கள்    20 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடன் வழங்க வேண்டும்,  2015 ஆண்டு முதல் உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத்துடன் இணைக்கவேண்டும், நிலுவை தொகை வழங்க வேண்டும்,  2016 ஆம் ஆண்டு    வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும், அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும், பேருந்துகளுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களையும் புதியதாக வாங்கி பொருத்த வேண்டும்,  மிகவும் பழைய பேருந்துகளை இயக்கும் முடிவை கைவிட வேண்டும், பழுதான பேருந்துகளை இயக்குவதால், டிரைவர், நடத்துனர்,பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால், உடனுக்குடன் பழுதான பாகங்களை, வேறு பேருந்துகளில் உள்ள கழற்றி பொருத்தாமல், புதியதாக வாங்கி பொருத்த வேண்டும், ஒய்வூதியர்களுக்கு தேவையான பலன்கள் கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டியஅனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். ஒய்வூதியர்களின் மனைவிக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடுஅரசு தீர்வு காண வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை புறநகர் பணிமனை முன்பு  நடைபெற்றது.




ஆர்ப்பாட்டத்திற்கு  பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார் .ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் ,சங்க கவுரவத் தலைவர் கே.சுந்தரபாண்டியன் ஏஐடியூசிமாவட்ட தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்தராஜன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் மல்லி.ஜி.தியாகராஜன், பாலசுப்ரமணியன், எஸ்.முருகையன்,  டி.தங்கராசு, ஜி.சண்முகம் ,என்.சேகர் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.