இணையதள வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் வர்த்தக சேவைகள் பெரும்பாலும் இணையதளங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. சிறு பொருட்கள் விற்பனை கூட இணையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. உலகத்திலே மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனமாக அமேசான் உள்ளது.


இந்தியாவில் அமேசான் நிறுவனத்திற்கு இணையாக ப்ளிப்கார்ட் நிறுவனமும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்குகிறது. விழாக்காலங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளை அறிவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.


நவராத்திரி பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக்பில்லியன் டேஸ் என்ற பெயரில் மிகப்பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் தற்போது தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.






இந்த நிலையில், ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் பலவற்றிற்கு மாறாக வேறு பொருட்கள் தங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சுமித்சிங்ராஜ்புத் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாடா ஜாக் ஸ்னீக்கர்ஸ் என்ற 1500 ரூபாய் மதிப்புள்ள ஷூவை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் ஆர்டர் செய்துள்ளார்.


இதையடுத்து, அவருக்கு ப்ளிப்கார்ட்டில் இருந்து அவரது பொருள் பார்சலாக அனுப்பப்பட்டுள்ளது. புதிய ஷூ கிடைத்ததாக ஆர்வத்துடன் பார்சலை திறந்து பார்த்த சுமித்ஷாசிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில், ரூபாய் சாதாரண பாடா செருப்பு இருந்துள்ளது. இதைக்கண்ட சுமித்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு பார்சலாக வந்த செருப்பையும், தனது ஆர்டர் பேக்கையும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.




அதேபோல, டெல்லியில் உள்ள யாஷஸ்வி ஷர்மா என்பவர் தனது லிங்க்ட்ன் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் தனது தந்தைக்காக ப்ளிப்கார்ட்டில் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் காதி கிராப்ட் சார்பில் தயாரிக்கப்படும் துணி துவைக்கும் சோப்பு வந்துள்ளது. இதைக்கண்டு யாஷஸ்வி ஷர்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.


இதுதொடர்பாக ப்ளிப்கார்ட்டை தொடர்பு கொண்டபோது, ப்ளிப்கார்ட் நிறுவனத்தினர் ஓ.டி.பி.யை அளிப்பதற்கு முன்பு பொருட்களை சரிபார்க்காததற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அலட்சியமாக பதிலளித்ததாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், சாமானிய மக்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.


இதனால், இணையத்தில் ஆர்டர் செய்த பொருட்களைப் பெற்றதற்கான ஓ.டி.பி.யை டெலிவரி செய்த நபர்களிடம் கூறும்முன்பு பொருட்களை சரிபார்த்துக்கொள்வது நல்லது ஆகும். 


மேலும் படிக்க : MIB Order : ஜீ மீடியா வழக்கில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவு.. சிறு ஊடகங்களுக்கான சமவாய்ப்பு..!


மேலும் படிக்க : Rupee Value : வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவு.. பெட்ரோல் விலையில் ஏற்படப்போகும் தாக்கம்; இந்தியா என்ன செய்யப்போகிறது?