அமெரிக்காவின் டாலருக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை அதிகரித்து வருவதால், இந்தியாவின் ரூபாயின் மதிப்பு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, சமீபத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதன் காரணமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பங்குகளில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக உலக பங்குச் சந்தைகள் பெரும்பாலும் சரிவை சந்தித்தன.


பங்குச் சந்தை நிலவரம்:


இந்திய பங்குச் சந்தைகளும், கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்து வந்தன. இந்நிலையில் இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தைகளும் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 816.72 புள்ளிகள் குறைந்து 57,282.20 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 254.4 புள்ளிகள் குறைந்து 17,072.95 புள்ளிகளாக உள்ளது.




டாலருக்கு பற்றாக்குறை:


வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறிய வருவதால், இந்தியாவில் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 81.25 ஆக ரூபாயின் மதிப்பு, இன்று காலை 81.47 ஆக சரிவை கண்டது.




ரூபாயின் மதிப்பு சரிவால்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய், 80 முதல் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 


கச்சா எண்ணெய் விலையில் தாக்கம்:


கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயை பலப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.


Also Read: Petrol, Diesel Price : சென்னையில் 128வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Also Read: Amazon Great Indian Festival Sale: ஐபோன் முதல் ஐவாட்ச் வரை ! Apple தயாரிப்புகளில் எக்கச்சக்க ஆஃபர்ஸ்!