புதுச்சேரியில் முன்விரோதம் காரணாமாக விசிக பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 வாலிபர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மங்களம் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு கோர்காடு பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக  நின்று கொண்டிருந்த ஏழு வாலிபர்களை பிடித்து விசாரிக்க முயற்சித்த போது இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்ட உடன் அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர், இதனை அடுத்து ஐந்து வாலிபர்களை பிடித்த போது அவர்களிடம் நாட்டு வெடி குண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ; தனியார் பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை..


 பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சல்மான் கான், ராஜி, சிற்றரசன், புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த வீரபாகு, ரவிகுமார் என்றும் இவர்கள் முன் விரோதம் காரணமாக உத்திரானிபேட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனை அடுத்து அவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்டவையை பறிமுதல் செய்த  போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஒடிய உத்திரானிபேட்டை சேர்ந்த தனசரன் மற்றும் அவரது கூட்டாளியை    போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




இந்த நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து வரும் கொலை சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியதால், இது தொடர்பாக டிஜிபி தலைமையில் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்மையில் உத்தரவிட்டார். இதனையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடிகள் வீடுகள் மற்றும் சந்தேகத்துக்கிடமானவர்களின் வீடுகளில் முதலியார்பேட்டை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், எஸ் பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்


இதனால் புதுச்சேரி வாணரப்படை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப் படவில்லை. இருப்பினும் ரௌடிகள் வீடு மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் வீடுகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சிறைச்சாலையிலிருந்து இந்த கொலைக்கான உத்தரவை பிறப்பித்த ரௌடி வினோத்திற்கு, பிரான்ஸிலிருந்து இளைஞர் ஒருவர் பணம் உதவி செய்துள்ளார். அவர் மீதும் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது கூறிப்பிடத்தக்கது .


கோவை: மேலாடையை கழட்டக் கூறி ஆசிரியர் பாலியல் தொல்லை? 11ம் வகுப்பு மாணவி தற்கொலை! தீவிர விசாரணை!