மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ  கிராமத்தில் தொடுவாய் செல்லும் சாலையில் மீன் வளர்ச்சிக்கழகம் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கின் பின்புறம் முத்து என்பவருக்கு சொந்தமான மீன் கம்பெனி உள்ளது. இந்நிலையில் அந்த மீன் கம்பெனியின் முன்பக்கம் உள்ள தகர கொட்டகையில் காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் தூக்கில் இறந்து பிணமாக தொங்கியுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சீசீர்காழிகாவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.





தகவலை அடுத்து சீர்காழி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் எரிந்த நிலையில் சடலமாக தொங்கியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடந்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பூம்புகார்  சேத்தம்மன்  கோவில் தெருவை சேர்ந்த  ரவி என்பவரின் 24 வயதான மகன் குணா என்பதும் இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது மீன்பிடி தொழிலில் செய்துவருதும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்று  திருமுல்லைவாசல் பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


Vijay Devarakonda | செம்மயான காதல் படமாம்.. தமிழுக்கு வரும் விஜய் தேவரகொண்டா? இயக்குநரும் மாஸ்.!


இந்நிலையில் உடலை கைப்பற்றி சீர்காழி காவல்நிலைய காவலர்கள் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மீனவ இளைஞர்  மர்ம மரணம் குறித்து யாரேனும் இவரை உயிருடன் தீவைத்து கொளுத்தி பின்னர் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து தப்பியுள்ளார்களா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருவதாகவும், இதனை தடுக்க மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி : சிறுத்தைகளுக்கு கிடைத்த பெரு அங்கீகாரம்’ – தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை..!