கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் இன்று தாமரை பேசியபோது, “ஏழ்மையை அரிசி சாதமோ, துணியோ இல்லாமல் கஷ்டப்பட்ட கதை” கூட அவருக்கு அவ்வளவு சரளமாக வந்தது. ஆனால் முதலில் ஒரு குடிகாரக் கணவனுக்கு மனைவியாக கொடுமைக்கும், அடிக்கும் ஆளாகி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்து மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் தாமரை. அவருக்கும் அக்கறையின்றிப் போகவே, தானே மீண்டும் சுயம்புவாக எழுந்திருக்கிறார். அப்போது மீண்டும் அழைத்துக்கொண்டு போன அந்தக் குடும்பத்தில் இருந்து, மகனை இப்போது வரை மறுபடியும் அழைத்துக்கொண்டுவர முடியவில்லை என சொன்னார். என் மகன் நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறான் பாத்தீங்களா? என உறையவைத்தார் தாமரை..





இன்று இமான் அண்ணாச்சி, எல்லாரிடமும் நன்றாகவே பேசியதாக தோன்றியது. இசையிடமும், பாவனியிடமும் மிக நன்றாக பேசினார். யுக்தியா நிஜமான பாசமா என்றெல்லாம் அவருக்குத்தான் தெரியும்.






அபிஷேக்கின் கதைக்கும் பலர் உருகினார்கள். அபிஷேக் எப்போது தனக்கான யுக்தியையும், மற்றவர்களைக் கணிப்பதிலும் பயங்கரமாக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.


மேலும் படிக்க:-