தெலுங்கு திரைப்படங்களின் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஷாலினி பாண்டேவுடன் அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் என ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல ரீச் கொடுத்தது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.


இந்நிலையில் தான் தற்போது தெலுங்கின் முன்னனி இயக்குநரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தில் நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கும் நிலையில், ரம்யா கிருஷ்ணன். ரோனிட், விஷூ ரெட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குத்துச்சண்டை வீரரைப்பற்றி என்பதால் ஆக்சன் மற்றும் காதல் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி வரவிருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். 




அவ்வப்போது இப்படத்தின் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தான், செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக தாமதமான நிலையில் மீண்டும் படப்படிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா விரைவில் தமிழில் ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. விரைவில் விஜய் தேவரகொண்டாவின் கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.


தற்போது லீகர் படத்தில் நடித்து வருகிம் விஜய் தேவரகொண்டா அடுத்து. இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் கவுதம் மேனன் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் அவர் படத்தை இயக்கவில்லை. அவர் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் கவுதம் மேனன், நடிப்பில் ஆர்வத்தை காட்டி வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.