சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷர்த். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனது பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க, கடந்த ஜூலை 5ஆம் தேதி 10 லட்சம் பணத்துடன் மதுரை வந்துள்ளார்.  மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார்  லாட்ஜ் அருகே நின்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர்கள் அர்ஷர்த் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அச்சுறுத்தி, பிடிங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.



 

இது தொடர்பாக ஜூலை 27ஆம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில்   மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் சுதந்திராதேவி ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியை சேர்த்த பால்பாண்டி, மதுரை சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி, விருதுநகர் திருத்தங்களை சேர்ந்த கார்த்திக் என்ற சீமைச்சாமி, ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 2,26,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மூளையாக இருந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாகினர்.



மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !

 

மேலும் தலைமறைவாக உள்ள 2 நபர்களை கைது செய்ய தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி தற்போது கோத்தகிரியில் போலீசாரல் கைது செய்யப்பட்டு மதுரையில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சிலர் கூறும்போது இன்ஸ்பெக்டர் வசந்தி தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இவரால் பாதிக்கப்பட்ட பலரும் புகார் தெரிவிக்க பயந்து வந்தனர். இந்நிலையில் இளையான்குடி டெய்லர் கொடுத்த புகாரில் சிக்கியுள்ளார். வசந்தியை தொடர்ந்து விசாரித்தால் பல்வேறு குற்றங்கள் வெளிவரும்” என தெரிவித்தனர்.