கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகின்றன. தகுதி 1 அக்டோபர் 10 ம் தேதியும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியும், அக்டோபர் 13 ஆம் தேதி தகுதி 2 ஆட்டமும் விளையாடும். இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


‘செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. தகுதி 1 மற்றும் 2 அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதிகளிலும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியிலும் நடைபெறுகிறது. மீதமுள்ள விளையாட்டுகளின் முழு அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக ஐபிஎல் அணிகள் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்போட்டியில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி தலைமையில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியும் அங்கு முகாமிட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளதால், எஞ்சியுள்ள வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஹர்த்திக் பாண்ட்யா வெளியிட்ட ஒரு புகைப்படம், கடும் வைரலாகி வருகிறது. அதில் அவர் அணிந்திருந்த வாட்ச் தான் அந்த வைரலுக்கு காரணம். அவர் அணிந்திருந்த காஸ்ட்லி வாட்ச் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. 






 


படெக் பிலிப்பி நடில்ஸ் பிளாட்டினம் 5711 என்கிற வாட்ச் தான் அது. அதுனுடைய விலையை கேட்டால் தலைசுற்றிவிடும். 5 கோடி ரூபாய்க்கு மேலாம் அதன் விலை. முழுவதும் பிளாட்டினத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வாட்ச்சில், பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. 


அந்த கடிகாரத்தின் சிறப்புகளை கீழே உள்ள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்....






ஹர்திக் பாண்ட்யாவின் இந்த காஸ்ட்லி வாட்ச் தான் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. 100 ரூபாய்க்கு வாங்கும் கடிகாரமும் அதே நேரம் தான் காட்டுகிறது என சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.