சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கெளதம். 24 வயதான இவர், கம்யூட்டர் இன்ஜினியர். இவரது தந்தை அயல்நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கெளதம் தனது நண்பர்களான சக்தி மற்றும் தீபக் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு இரவு விருந்தில் பங்கேற்ற அவர்கள், நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளனர். 


இவர்களுடன் நடனம் ஆட, நடன பெண் ஒருவரை வாடகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திருமணம் ஆகாத அந்த இளம் பெண், கோயம்பேட்டைச் சேர்ந்தவர். விருந்து நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை தொழிலாக செய்து வருகிறார். திட்டமிட்டபடி அன்று ஓட்டலில் நடன விருந்தில் அந்த பெண்ணுடன் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பெண் புறப்பட்ட தயாரான போது, அவரை கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கெளதம் கூறியுள்ளார். அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க, நண்பர்களுடன் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு கெளதம் புறப்பட்டுள்ளார். 




கார் நகர்ந்ததும், உள்ளே இருந்த இளம் பெண்ணுக்கு கெளதம் உள்ளிட்ட நண்பர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கூச்சலிட்டுள்ளார். இலங்கை தூதரகம் அருகே சென்ற போது, இளம் பெண்ணின் கூச்சல் அதிகமானது. இதைத் தொடர்ந்து தூதர பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த காரை சுற்றிவளைத்து மடக்கினர். 


போலீசார் விசாரித்த போது, நடந்தவற்றை அந்த பெண்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெளதம் உள்ளிட்ட நண்பர்கள், செருப்பால் அந்த இளம் பெண்ணை அடித்துள்ளனர். இதற்கிடையில் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் அங்கு வந்து இளம் பெண்ணை மீட்டனர். கெளதம் சிக்கிய நிலையில், அவரது நண்பர்கள் சக்தி, தீபக் இருவரும் தப்பினர். இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், கெளதமை கைது செய்து போலீசார், தப்பியோடி அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடனப் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பயன்படுத்த நினைத்ததும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. நடனத்தின் போது இளம் பெண் காட்டிய நெருக்கத்தை தவறாக புரிந்து கொண்டு, அவரை அடைய அவர்கள் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண