மகளை காதலித்த காதலனுக்கு சேலை அணிந்து அடித்து கொன்ற கொடூர சம்பவம் குஜராத்தி அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள சொக்கரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் ராவல் (20). இவர், தனது பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தந்தை காளிதாஸ் மாலி, இரண்டு மாதங்களுக்கு முன்பு ராவலை எச்சரித்துள்ளார். ஆனாலும் ராவல் தனது காதலியை சந்திப்பதை நிறுத்தவில்லை.Kerala Model Death: கேரளா மாடல் அழகிகள் விபத்தில் திருப்பம்: போதை கும்பலுக்கு தொடர்பு!


கடந்த புதன்கிழமை மதியம் காளிதாஸ் வயல் அருகே, காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெண்ணின் தாய், இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதனால் பயந்துபோன ராவல் தனது வீட்டிற்கு தப்பியோடினார். இதனைத்தொடர்ந்து, காளிதாஸ் தனது உறவினர்களுடன் ராவல் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை வீட்டிற்குள் இருந்து இழுத்து வந்து சேலை உடுத்தி அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்து கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் ராவலை அடித்து உதைத்து அவரது அந்தரங்க உறுப்புகளையும் தாக்கினர். ராவலின் உறவினர் அவருக்கு உதவச் சென்றபோது, ​​அவர்களும் தாக்கப்பட்டனர்.


இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராவல் முகத்தில் தண்ணீர் தெளித்தும் பதில் எதுவும் சொல்லவில்லை. உடனே, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ராவல் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். Government Doctors Arrest : ஹோட்டலில் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது!


தனது மகன் அடித்து கொல்லப்பட்டது குறித்து ராவலின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் தந்தை காளிதாஸ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். காதலித்ததற்காக 20 வயது இளைஞரை அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டேட்டிங் செயலியில் சாட்டிங்.! மும்பை முதியவரை குறி வைத்த வெளிநாட்டுப் பெண்.. பணம் மோசடி!!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண