சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கடந்த மாதம் 15 ம் தேதி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தச் சூழலில் சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஐபிஎல் கோப்பை இந்தியா திரும்பியதை தொடர்ந்து, சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 


 


 
முன்னதாக ஐபிஎல் கோப்பையை சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பூஜை செய்யப்பட்டது.இந்த பூஜை இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகளும் இந்திய சிமிண்ட்ஸ் தலைவருமான ரூபா குருநாத் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தப் பூஜைக்கு பின் ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இடத்திற்கு எடுத்த செல்லப்பட்டது. அதன்பின்னர் சென்னை அணி கோப்பை வென்றது தொடர்பாக இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் கருத்து தெரிவித்தார். 


அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அணி குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடிய போது மைதானம் முழுவதும் சென்னை ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் தென்பட்டது. அதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையையும் தோனியையும் எப்போதும் பிரிக்க முடியாது. தோனி தான் சென்னை, சென்னை அணி தான் தோனி என்பது போல் இரண்டு ஒன்றோடு ஒன்றாக உள்ளது.



இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு தோனி உள்ளிட்ட சென்னை வீரர்கள் இந்தியா வந்த பிறகு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தார். 


இந்தநிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்  கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த பாராட்டு விழாவில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, முன்னாள் இந்தியன் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். 


நேரலை வீடியோ இதோ...



பாராட்டு விழா தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஜெர்சியை பரிசாக வழங்கினர். 






 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண