மதுரை HMS காலனி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி. இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் பல்வேறு நோய்களுக்கு பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரேகாதேவி என்பவர் மதுரை மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் செல்வராஜ், மருந்தாளர் பாலசெந்தில் ஆகியோர் யோக மீனாட்சி வீட்டிற்கு சென்று பார்த்ததில் மருத்துவமே படிக்காமல் வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு மருத்துவ இணைய இயக்குநர் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் யோக சரஸ்வதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவருடன் உதவியாளராக இருந்த சரஸ்வதி மற்ற பணியாட்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்