மதுரை என்றாலே அரசியல், சினிமா தொடங்கி காதுகுத்து முதல் கல்யாணம் வரை வித்தியாசமான வசனங்களுடன் அனைவரையும் கவரும் வகையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவார்கள். திருமணவிழா சுவரொட்டிகளில் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் படங்களை அச்சிடுவது, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் எமனுக்கே எச்சரிக்கை விடுப்பது, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது நடிகர்களை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் என அத்தனை போஸ்டர்களையும்  கடந்துசெல்லும் போது பார்க்காமல் செல்ல முடியாது என்கிற அளவிற்கு ரசிப்பு தன்மையோடு் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்.



 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் பிரமாண்டமான வெற்றியைப் பதிவு செய்த படம் 'அவதார்'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி  வெளியாகவுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.  உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் இன்று அவதார் 2 படம் வெளியாக உள்ள நிலையில், இதனை வரவேற்கும் விதமாக ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் போல அவதாருடைய ரசிகர்கள் என்ற பெயரில் மதுரை முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பொதுமக்கள் கவர்ந்துள்ளது. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கடவுளின் அவதாரம் அவதார் ஆன் த வே  காந்தாரா ஓரம்போ என்ற தலைப்புடன் அடிக்கப்பட்டுள்ள போஸ்டர்களில் 



என்னதான் காந்தாரா பான் இந்தியா படமா இருந்தாலும்., அதுல கடவுளோட சிறப்பையும், காட்டோட முக்கியதுவத்தையம் சொல்லி இருந்தாலும் 13 வருசத்துக்கு முன்னாடியே பான் வேல்டு லெவல்-ல கடவுளோட சிறப்பையும், காட்டோட முக்கியதுவத்தையும் ஆணித்தனமா அடிச்சு சொன்ன அவதார் டிசம்பர் 16ஆம் தேதி ஆன் தி வே.,  காந்தாரா ஓரம்ப போ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.