கர்நாடக மாநிலம், தாவணகரே மாவட்டம், பன்னிகோடு கிராமத்தில் வசிப்பவர் கெஞ்சப்பா (வயது 34). இவரது மனைவி ஷீலா (வயது 28).


குடிப்பழக்கத்துக்கு அடிமை


இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், கெஞ்சப்பா கொஞ்சம் கொஞ்சமாக திருமணத்துக்குப் பின் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.


மேலும், குடிபோதையில் தன் வீட்டுக்குத் திரும்பி மனைவியுடன் சண்டை போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க: கரண்ட் கட்.. தலைக்கேறிய போதை.. மொட்டை மாடியில் தூங்கிய தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!


கொலையில் முடிந்த வாக்குவாதம்


இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன். 08) வழக்கம்போல் குடிபோதையில் வீடு திரும்பிய கெஞ்சப்பா, தன் மனைவி ஷீலாவிடம் திடீரென சிக்கன் குழம்பு செய்து தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 


ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு ஷீலா சமைத்துக் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த கெஞ்சப்பா ஷீலாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.


அதனைத் தொடர்ந்து கத்தியுடன் சென்று ஹரிஹர் காவல் நிலையத்தில் கெஞ்சப்பா சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடரும் குடிபோதை கொலைகள்


குடிபோதையால் நடைபெறும் கொலைகள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


முன்னதாக இதேபோல் தமிழ்நாட்டில்  திருப்பெரும்புதூரை அடுத்த சின்ன மதுரப்பாக்கத்தில் குடிபோதையில் தந்தையே தன் இரு மகள்களை உடுட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் விரைந்து மது விலக்கை அமல்படுத்துமாறு முதலமைச்சரிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும் வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!


Crime: இளம் பெண்ணிற்கு சமூக வலைதளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு... பாலியல் வன்கொடுமையில் முடிந்த சோகம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண