நாள்: 10.06.2022


நல்ல நேரம் :


காலை 12.30 மணி முதல் காலை 01.30 மணி வரை


மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 01.30 மணி முதல் நண்பகல் 02.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் மதியம் 9.00 மணி வரை


எமகண்டம் :


 மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் –  மேற்கு  


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமையாக இருப்பீர்கள். மேலும் நாளைய நாள் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை எதிர்பாராத பணவரவு காணப்படும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவி சில பதட்டமான சூழ்நிலை காணப்படும் இத்தகைய செயல்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பண வரவு குறைந்து காணப்படும். உங்கள் பிரியமான ஒருவரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, 


நாளைய நாள் உங்களுக்குள் ஏற்பட்ட வருத்தங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை உங்கள் செயல்களில் திருப்தி இருக்காது. மேலும் உங்களுக்கு அலுவலகத்தில் அதிக வேலை காணப்படும்.  அவற்றை திட்டமிட்டு செயல்படுத்துவன் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, உங்கள் செயல்கள் அனைத்து வெற்றியில் முடியும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை முக்கியமானவர்கள் சந்திப்பு மூலம் பங்கு பெற நேரலாம். கணவன் மனைவி நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள் இதனால் உங்கள் உறவு மகிழ்ச்சியனாக இருக்கும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை கடின உழைப்பு மற்றும் முயற்சி மூலம் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, தொழில் உத்தியோகம் பொறுத்தவரை நீங்கள் செய்த தவறான காரியத்தால் உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது. கணவன் மனைவி உறவுக்குள் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த இயலும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் அதிகமாக காணப்படும். அதனால் பணம் அதிகமாக செலவாகும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, தொழில் உத்தியோகம் பொறுத்தவரை அதிகப் பணிகள் காரணமாக உங்களால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. கணவன் மனைவி உறவுக்குள் சிறு பிரச்சனை காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனைப்தவிர்க்க தவிர்க்க மனம் திறந்து வேண்டும். அதன் மூலம் நல்ல புரிந்துணர்வை பேச ஏற்படுத்தலாம். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, தொழில் உத்தியோகம் பொறுத்தவரை வேலைச்சுமை அதிகமாக காணப்படும் அதனை முடிப்பதற்குள்ஒரு வழி ஆகிவிடுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் உறவில் நல்ல புரிந்துணர்வும் நல்லிணக்கமும் ஏற்பட நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பயணத்தின்போது பண இழப்பு காணப்படுகின்றது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எடுக்கும் உறுதியான முடிவுகள் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் இனிமையான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியிடச் சூழல் நல்ல பலனளிக்கும் வகையில் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் இனிமையான வார்த்தை மூலம் நாளை உங்கள் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பண வரவு அதிகமாக இருக்கும். 


மகரம் :


மகர ராசி நேயர்களே, கணவன் மனைவி உறவுக்குள் பணிகள் அதிகமாக காணப்படும் முறையாக திட்டமிட்டு ஒழுங்கமைப்பதன் மூலம் சிறப்பாக பணிகளைக் கையாளலாம். கணவன் மனைவி உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, கொஞ்சம் கவலையுடன் காணப்படுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நாளைய நாள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை உங்களிடம் பணியிடத்தில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் என்பதால் உங்களால் சிறப்பாக பணியாற்ற இயலாது. மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதிநிலை வளர்ச்சி சிறப்பாக இருக்காது. 


மீனம்:


மீன ராசி நேயர்களே,


தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் உற்சாகமான போக்கை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை அனுபவிப்பீங்கள். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண