திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டீபன்ராஜை அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்து தலையை அங்கே வைத்து விட்டு மட்டப்பாறை அருகே உடலை வீசி சென்றனர். மேலும் கொலை செய்யப்பட்டு இறந்தவர் மீது கொடைக்கானல், திண்டுக்கல் நகர் வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் முன்பகை காரணமாக தான் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் போலிசாரால் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில், அனுமந்தராயன் கோட்டை அருகில் உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன்,  கார்த்திகேயன், சங்கரபாண்டி, மார்தீஸ்வரன், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகிய 6 பேரை போலிசார் கைது செய்தனர். இதில்  பிடிபட்ட மன்மதன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில்  கால் முறிவு ஏற்பட்டது.




திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மதன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். வழக்கில் பிடிபட்ட 5 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திண்டுக்கல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11.500 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட திமுக கிளை செயலளார் இன்பராஜ். ஸ்டீபன் ஆகியோர்கள் இந்த கொலை வழக்கில் கூட்டுசதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் இன்பராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பித்திலிருந்தே 4 கொடூர கொலை சம்பவங்கள் அறங்கேறி உள்ளன.  மேலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குற்ற சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கபட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் போலீசார் சோதைனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கட்டுபடுத்துவதற்க்காக 44 ரவுடிகள் உட்பட 339 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி இயல்பு நிலையில் இருப்பதற்கு போலிசார் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். 


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


திண்டுக்கலில் பெண் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது