காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு.. புதுமாப்பிள்ளையின் அந்தரங்க உறுப்பை கட் செய்த பெண் வீட்டார்!

காதலியை திருமணம் செய்ததற்காக இளைஞர் தாக்கப்பட்டு பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

தங்களின் மகளை திருமணம் செய்ததற்காக ஆத்திரத்தில் புதுமாப்பிள்ளையின் அந்தரங்க உறுப்பை பெண் வீட்டார் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 

Continues below advertisement

தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில்  கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி  இந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதற்காக, பெண்ணிப் குடும்பத்தினர் அந்த இளைஞரை முதலில் கடத்திச் சென்று, தாக்கி, அவரது பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும், அவர்கள் மீது கொலை மற்றும் கடத்தல் முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்று கூடுதல் டிசிபி பிரசாந்த் கவுதம் கூறினார். 22 வயது இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மருமகனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன மாமியார்: பெற்ற மகளுக்கே வில்லியாக மாறிய தாய்..!

அந்த இளைஞரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில்,  வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பெண்ணின்குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.திருமணத்திற்குப் பிறகு, டிசம்பர் 22 ஆம் தேதி டெல்லி திரும்பிய தம்பதியினர் தங்கள் குடும்பத்தினரிடம் தற்காத்துக் கொள்ள போலீஸ் பாதுகாப்பு கோரினர்.

மேலும் படிக்க: Bengaluru Crime | நாய்களுக்கு உணவளிக்க வந்த 24 வயது பெண்.. அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டி டார்ச்சர் செய்த போலீஸ்

பாதுகாப்புக்காக ரஜோரி காவல் நிலையத்திற்கு தம்பதியினர் வருவதை பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அறிந்ததாக கூறப்படுகிறது. தம்பதியினர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், பெண்ணின் குடும்ப உறுப்பினர்களால் புதுமாப்பிள்ளை கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை, இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொடூர சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.

மேலும் படிக்க: Callboy Husband : ‛கால்பாய்’ காதல் கணவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி... ஏன் தெரியுமா..?

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola