தெருவில் பெண் ஒருவருக்கு மொபைல் டார்ச் அடித்து, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய போலீசாரின் செயல் அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.


பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்ருதஹள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். யெலஹங்கா நியூ டவுன் அருகே போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தபோது, ​​தெருநாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை அவர் பார்த்துள்ளார். சந்திரசேகர்  என அடையாளம் காணப்பட்ட தலைமைக் காவலர் மீது அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 மற்றும் பிரிவு 354A ஆகியவற்றின் கீழ் தலைமைக் காவலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க: Callboy Husband : ‛கால்பாய்’ காதல் கணவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி... ஏன் தெரியுமா..?


தனது பகுதியில் தெருநாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த போது, ​​தனது வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பெண் கூறினார். சந்திரசேகர் யெலஹங்கா நியூ டவுனில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.


தெரு நாய்களுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, ​​சிறிது தூரத்தில் ஒரு நபர் நிற்பதைக் கண்டார். அவர் அந்த நபரை பார்த்தபோது, ​​​​அவர் தனது மொபைலின் டார்ச்லைட்டை ஆன் செய்துவிட்டு மொபைலை தனது பேண்ட்க்கு அருகில் வைத்து ஒளிரச் செய்வதை அப்பெண் பார்த்துள்ளார்.




அந்த நபர் தன்னை ஒரு போலீஸ்காரர் என்றும், அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி கத்தியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்தப் பெண் மொபைல் எடுத்துச் செல்லாததால், அந்த வழியாகச் சென்ற ஒருவரிடம், போலீசாரின் வெளிப்படையான செயலைப் பதிவு செய்யச்சொன்னார்.


இதனைத்தொடர்ந்து, அந்த நபர்  போலீசாரின் கேவலமான செயலைப் பதிவு செய்யத் தொடங்கியதும், அந்த ஆபாச செயலின் வீடியோவை நீக்குமாறு கெஞ்சத் தொடங்கினார். அந்த வீடியோ வெளியானால் தனது வேலைக்கு ஆபத்து ஏற்படும்  என்று கூறி பெண்ணிடமும் போலீஸ்காரர் கெஞ்சினார். பின்னர், செவ்வாய்க்கிழமை, வீடியோ எடுத்த நபர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், அது வைரலானது. போலீசாரின் செயல்கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்து, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ரு வலியுறுத்தினர்.


இதனைத்தொடர்ந்து, போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காலவரையின்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண