ஆண் நண்பரை கழுத்தறுத்துக்கொன்று பெரிய சூட்கேஸில் வைத்து ரயில் நிலையத்துக்குக் கொண்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்


டெல்லி காஜியாபாத் ரயில் நிலையத்தை நோக்கி பெண் ஒருவர் நடு இரவில் மிகப்பெரிய ட்ராலி சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அப்பெண்ணை மறைத்து எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு அவர் ரயில் நிலையம் என்று கூறியுள்ளார். பெரிய சூட்கேஸால் கஷ்டப்படுகிறீர்கள் நாங்களே உங்களை கொண்டு சென்றுவிடுவதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் போலீசாரின் உதவியை மறுத்த அப்பெண் ஆட்டோவுக்காக அலைந்துள்ளார். 


ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. மீண்டும் அப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த போலிசார் எந்த ரயில்நிலையம் செல்லவேண்டுமென கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் முன்னுக்குபின்னாக பதிலளித்துள்ளார். மேலும் அவரிடத்தில் ரயில்நிலையத்துக்கான டிக்கெட்டும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். உள்ளே ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை கைது செய்த போலீசார் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.


 




 


மேலும் படிக்க: இலங்கை : தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா


நடந்தது என்ன? 


விசாரணையில் போலீசாரிடம் சிக்கியவர் ப்ரீத்தி சர்மா என்பது தெரியவந்துள்ளது. 35வயதான ப்ரீத்தி கணவரை பிரிந்து வாழ்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் முகமது பிரோஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 22 வயதான முகமது ப்ரீத்தியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் ப்ரீத்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் வேறு வேறு மதம் எனபதால் முகமது திருமணத்துக்கு மறுத்துள்ளார். இந்த திருமண பேச்சுவார்த்தை இருவருக்குமிடையே வாக்குவாதமாக ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ப்ரீத்தி கையில் இருந்த பிளேடால் முகமதுவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த முகமது அங்கேயே உயிரிழந்தார். உடனடியாக கடைக்குச் சென்று 3 அடி நீளத்துக்கு பெரிய சூட்கேஸ் வாங்கிய ப்ரீத்தி முகமது உடலை அதற்குள்  அடைத்து நடுராத்தியில் ரயில்நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார் ப்ரீத்தி.


ரயில் நிலையத்துக்கு ஏன் வந்தார் என்பதையும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆண் நண்பரின் உடலை எதாவது ஒரு ரயிலில் போட்டுவிட்டு சென்றுவிடலாம் என நினைத்து உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு வந்ததாக ப்ரீத்தி கூறியுள்ளார்.


Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண