யுகபாரதி :
தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இது தவிர காதல் பிசாசே, வசியக்காரி, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், தாவணி போட்ட , எள்ளுவய பூக்களையே என ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார். இதுவர யுகபாரதி மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் , அரசியல் விமர்சகரும் கூட .
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசையில் ஏன் பாடல்கள் எழுதவில்லை:
யுகபாரதி இளையராஜா , வித்தியாசாகர் , ஹாரிஸ் ஜெயராஜ் , யுவன் சங்கர் ராஜா , அனிருத் என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது இல்லை . அது ஏன் என்பது குறித்து யுகபாரதி நேர்காணல் ஒன்றில் பதிவு செய்தார். அதில் “எனக்கும் ரஹ்மானுக்கு அறிமுகமே இல்லை. ஏன் அவரது இசையில் பாடல்கள் எழுதவில்லை என்பதை ரஹ்மானிடமும் அவரை நாடிச்செல்லும் இயக்குநர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் அவரை சந்தித்ததே கிடையாது. இப்படி ஒருத்தர் பாடல் எழுதுவாரு அவருக்கு தெரியுமான்னே தெரியலை” என்றார். இந்த நேர்காணலுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ சக்க சக்களத்தி “ பாடல் வரிகளை எழுதியிருந்தார் யுகபாரதி. இப்பாடல் இடம்பெற்றிருந்த திரைப்படம் கலாட்டா கல்யாணம்.
வித்யாசகருடன் அதிகம் இசையமைக்க காரணம் :
யுகபாரதி லிங்குசாமியின் பிடித்தமான பாடலாசிரியர்களுள் ஒருவர். அவரது அனைத்து படங்களிலும் யுகபாரதியின் பாடல் வரிகளை ஒரு செண்டிமெண்டாகவே வைத்திருப்பார். அதே போல யுகபாரதி அதிகம் பாடல் எழுதிய இயக்குநர்களுள் ஒருவர் வித்யாசாகர். ஆனா பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலுக்கு பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு ,மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர் லிங்குசாமி. முதன் முதலாக வித்யாசாகரிடம் அழைத்து சென்ற பொழுது அவர் காதல் பாடலை எழுத சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் யுகபாரதி எழுதிய பாடல் பிடிக்காததால் , அவரை அவமானப்படுத்தி பேசியிருக்கிறார்.
அந்த அவமானத்தின் விளைவில் உருவான பாடல்தான் காதல் பிசாசே. மறுநாள் பாட்டை காட்டியதும் வித்யாசாகருக்கும் மிகவும் பிடித்துப்போனதாம் . அதன் பிறகு எனது அனைத்து படங்களிலும் உங்களின் பாடல் இருக்கும் என உறுதியளித்தாராம் வித்யாசாகர் . இதனை யுகபாரதியே மேடை ஒன்றில் பகிர்ந்திருந்தார்.