Crime :  டெல்லியில் கொசு விரட்டி மருந்தை பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கொசு அதிகமாக இருந்தால் வீட்டில் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இவற்றில் இருந்து வரும் நச்சு சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் யாரும் கணக்கில் எடுக்காத ஒன்றாகத்தான் உள்ளது. அதன்படி, டெல்லியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 


அதன்படி, டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு விரட்டியை நேற்று இரவு ஏற்றியுள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர், அங்கு ஒரு குழந்தை உட்பட 6 பேர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


உடனே அவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  மேலும் அவர்கள் அளவுக்கு அதிகமாக கொசு விரட்டிகளை ஏற்றியதோடு அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுத்தன்மையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இன்று காலை 8.30 மணியளவில் சாஸ்திரி பார்க் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர், வீட்டை சுற்றி ஆய்வு செய்ததில் இரவு தூங்குவதற்கு முன்பு, சொசு விரட்டியை அதிகளவில் ஏற்றி வைத்து, அதில் இருக்கு துகள்கள் படுக்கையின் போர்வையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.


இதனால் அதில் இருந்த நச்சுப்புகையால் அவர்கள் 6 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் விபத்து ஏற்பட்ட வீட்டில் எட்டு பேர் இருந்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் தீக்காயங்களுடன் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக" போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime : 'என்னோட சீட்ல உட்காருவியா....? ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சக ஊழியர்... என்ன நடந்தது...?