32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க உறுப்பை எரித்துகொன்றதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியின் துவாரகா பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஒரு குப்பை மேடு அருகே உள்ள வாய்க்காலில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பின்னர், நவம்பர் 17 ஆம் தேதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்தனர். பரிசோதனையில் அந்த இடங்களில் எல்லாம் தொட வைத்த பெண் - வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய கும்பல்
பின்னர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையின் போது சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். போலீசாரின் விசாரணையில், சிறுவன், அந்தப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், ஆதாரங்களை அழிக்க அவரது அந்தரங்க உறுப்புகளுக்கு தீ வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சுமார் 2700 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்தது. ஒரு சிறப்புக் குழு வழக்கை விசாரிக்கத் தொடங்கியதும், அந்தக்குழு பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பியது. அந்த புகைப்படத்தை அவரது குடும்பத்தினர் பார்த்த பிறகே பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். ஆணுறுப்பு கட்... வலியால் துடித்த இளைஞர்... வெட்டிய காதலிக்கு போலீஸ் வலைவீச்சு!
போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. ஆனால் அதிகாரிகள் சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறினர். தலைநகர் டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றிய பிறகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. Watch Video: பீர் குடிக்க முயற்சித்த பாம்பு... அதன் பின் நடந்த விபரீதம்... ஷாக் வீடியோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்