உணவில் மயக்க மருந்தை கலந்து காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான ரீமாவுக்கும் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது. அப்போது, இருவரும் நேருக்கு நேர் சந்தித்து, நெருங்கி பழகிவந்தனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தனது வீட்டுக்கு வருமாறு இளைஞரை ரீமா அழைத்துள்ளார். அந்த இளைஞர் ரீமாவின் வீட்டிற்கு வந்தார். இருவரும் சாப்பிட்டனர். பின்னர், ரீமா அந்த இளைஞருடன் அவரது வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். Amazon Prime Membership: அமேசான் ப்ரைம் அதிரடி விலை உயர்வு.! கலங்கும் வாடிக்கையாளர்கள்!
இந்நிலையில், நள்ளிரவில் கடும் வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர் எழுந்து பார்த்தபோது அவரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் கசிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, ரீமா அங்கு இல்லை. உடனே அவரை தொடர்பு கொண்ட இளைஞர் தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதையறிந்த ரீமா வீட்டுக்கு வந்து இளைஞரை ஜெய்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.. மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின், 19ஆம் தேதி இளைஞர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதையடுத்து ரீமா மீது இளைஞர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரீமாவை தேடி வருகின்றனர். Case Against Suriya Jyothika: ஜெய்பீம் விவகாரம் - சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழு மீது வன்னியர் சங்கம் வழக்கு
உண்மையான காரணம்
அந்த இளைஞருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால், ரீமா இளைஞரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளைஞர் மறுத்ததால், உணவில் மயக்க மருந்தை கலந்து ரீமா ஆணுறுப்பை துண்டித்தது தெரியவந்தது. இருப்பினும், ரீமா கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள். இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPL 2022 Auction : ‛நானும் ஷ்ரேயாஸும் ஒதுக்கப்படுகிறோம்’ அஸ்வின் பகீர் குற்றச்சாட்டு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்