மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக அர்ஜூனன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரை  வழி மறித்து வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக அர்ஜுனனிடம் புகார் அளித்திருந்துள்ளார்.


Yash Toofan Song : குறுக்குல யாரும் போயிராதீங்க சார்.. கே.ஜி.எஃப் 2 ட்ரெய்லர் தேதியோடு வெளியானது தூஃபான் பாடல்..!




புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன்,  மணிமாறன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த வினோத் என்பவரை விசாரணை மேற்கொண்டார். அப்போது வினோத்திற்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மணிமாறனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன் செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளார். 


Prashanth marriage : செல்லாத முதல் திருமணம்.. 2-வது திருமணத்திற்கு தயாரான பிரசாந்த்.. பொண்ணு யார் தெரியுமா?




அப்போது, தொலைபேசியில் சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசிய செந்தில்  கடுமையாக திட்டி காவல் சிறப்பு  உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும்  தன்னை இனிமேல் விசாரித்தால் அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என கடுமையாக பேசி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து ரவுடி செந்தில் மீது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான உள்ள ரவுடி செந்திலை தேடி வருகின்றனர். 





Jayalalitha Death Case : ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்..


வழக்கு விசாரனைக்கு அழைத்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை ரவுடி மிரட்டிய சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீர்காழியை சேர்ந்த பார் கவுன்சில் செயலாளர், வழக்கறிஞருமான ராஜேஷ் என்பவர் காவல்நிலையத்தில் புகுந்து குடி போதையில் காவல் நிலையத்தில் காவலர்களை  தகாத வார்த்தைகளை கூறி திட்டியும் காவல் நிலையத்திலேயே ரகளையில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் மீண்டும் சீர்காழி காவலர்களை தொடர்ந்து பலர் மிரட்டும் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை மட்டும் இன்றி, காவலர்களுக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலைமை என்ன என கேள்வி எழுந்துள்ளது.