1990-ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலமாக  17 வயதில் ஹீரோவாக களமிறங்கியவர் நடிகர் பிரசாந்த். கோலிவுட்டில் ஹீரோவாகவும் , இயக்குநராகவும் கலக்கிக்கொண்டிருந்த தியாரஜானின் மகன் என்ற அந்தஸ்து , பிரசாந்தை சற்று வேகமாகவே மக்களிடம் கொண்டு சேர்ந்தது. மேலும் பிரசாந்த் அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்திருந்தார். வைகாசி பொறந்தாச்சு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு தொடந்து காதல் ஜானரிலேயே நடித்து வந்த பிரசாந்த் 90களின் ஜாக்லெட் பாயாக கொண்டாடப்பட்டார்.


இவர் நடிப்பில் வெளியான செம்பருத்தி , திருடா திருடா, ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம் , கண்ணெதிரே தோன்றினால் , ஜோடி, அப்பு என பல படங்கள் இன்றும் பலருக்கும் பேவரெட் . முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்திற்கு கடந்த 2005-ஆம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு , திரை பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.





 


அடுத்த ஆண்டே இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ஒரு  சில ஆண்டுகளிலேயே குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தற்காலிகமாக பிரிந்தனர். இதனால் பிரசாந்த் நீதிமன்ற உதவியை நாடினார். இந்த வழக்கு நிலைவில் இருந்தபொழுதே , பிரசாந்தின் மனைவி கிரஹலட்சுமி , தன்னை வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சமயத்தில்தால் பிரசாந்திற்கு, தான் திருமணம் செய்த பெண்ணிற்கு 1998-ஆம் ஆண்டே வேணு கோபால் என்பவருடன் முதல் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுகிறது.


இதுகுறித்த விவரங்களை தங்களிடம் பெண் வீட்டார் மறைத்துவிட்டதாகவும்   விவாகரத்து பெறாமலேயே பிரசாந்தை திருமணம் செய்துகொண்டார் கிரஹலட்சுமி  என்ற பகிரங்க குற்றச்சாட்டினை  நீதிமன்றத்தில் முன் வைத்தார் பிரசாந்த். ஆனால் இதுகுறித்து பிரசாந்திற்கு ஏற்கனவே தெரியும் என கிரஹலட்சுமி தரப்பு வாதிட்ட நிலையில் , சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து விவாகரத்து கோரியது. 


இந்த சம்பவத்திற்கு பிறகு பிரசாந்த் திரைப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். சில காலங்களுக்கு பிறகு நடிக்க முனைப்பு காட்டியவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே தலைக்காட்டி வந்தார். இந்த நிலையில் பிரசாந்த் 2 வது திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. பிரசாந்திற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தற்போது நடைப்பெற்று வருவதாகவும் , இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


பெண் யார் ? எப்போது திருமணம் உள்ளிட்ட விவரங்களை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.