Crime: ராஜஸ்தானில் மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்று, அவரது சதையை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மூதாட்டி கொலை


ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (65). இவருக்கு பிரேன் கதாத் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மூதாட்டி சாந்தி தேவி தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடு மேய்சலுக்கு சென்றுள்ளார்.


அப்போது, அங்கிருந்த ஒரு இளைஞர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அதோடு இல்லாமல்  பேசிக் கொண்டிருக்கும்போதே மூதாட்டியை கல்லால் அடிக்க தொடங்கி உள்ளார். அவர் தோற்றமும் செயல்பாடுகளும் விசித்திரமாக இருந்துள்ளன. இளைஞரின் கோர தாக்குதலில் மூதாட்டி சாந்தி தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நரமாமிசத்தை தின்ற கொடூரம்


இதனை அடுத்து அந்த இளைஞர் மூதாட்டியின் உடலை கிழித்து, அந்த நரமாமிசத்தை உட்கொள்ள தொடங்கினார். பின்னர், மூதாட்டியின் உடல் பாகங்களை வெட்டி அதன் சதையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுள்ளார். இதை அந்த பகுதி வழியாக வந்த மூதாட்டியின் மகன் பிரேன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த கொடூர காட்சியை பார்த்தும் அங்கிருந்து பயந்து ஓடி, அப்பகுதி மக்களை அழைத்து வந்துள்ளார். 


உடனே சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினரை பார்த்து அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். உடனே இது பற்றி மூதாட்டியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 


இவரிடம் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும், இதனால் அவர் ஆக்ரோஷமாக நடத்து கொள்கிறார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவமனை ஊழியர்களிடமும் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.


ஷாக் காரணம்


இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ”குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹைட்ரோபோபியா (hydrophobia) நோயால் பாதிக்கப்பட்டு பங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவரை வெறிநாய் கடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தடுப்பூசி போடாமல் சில நாட்கள் அப்படியே இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரேபிஸ் வந்திருக்கலாம்.  மேலும், இவர் உரிய சிகிச்சை பெறாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


CM Stalin:எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ் நாட்டை மறக்காதீர்கள் .. முதலமைச்சர் ஸ்டாலின் உரை...