Crime :  மகாராஷ்டிரா மாநிலத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை கொலை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக,  மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 22 வயது பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது சந்தேகத்தின்படி இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.


தானே மாவட்டத்தில் 22 வயதுடைய நபரும், அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இவர்கள் தனியாக வீடு எடுத்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கு சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் கடும் கோபமடைந்த அந்த நபர், கசரா என்ற பகுதிக்க நேற்று முன்தினம் காரில் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். 


பின்னர், அந்த பெண்ணை தனது நண்பருடன் சேர்ந்து பலமுறை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இதை அடுத்து அந்த பெண்ணை அருகில் இருக்கும் காட்டில் வீசிவிட்டு சென்றுள்ளார்.  விசாரணையில் அந்த நபர் உண்மையை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதை அடுத்து,  உயிரிழந்த பெண்ணின் மொபைல் ஃபோனைக் மீட்டு, விசாரணை செய்து வருகின்றனர். எந்த காரணத்திற்காக கொன்றுள்ளனர் என்பது குறித்து  தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இந்த கொலைக்கு காரணமான ஆப்தாபை போலீசார் கைது செய்துள்ளனர்.




மேலும் படிக்க


Crime : ரவுடியை போட்டு தள்றோம்.. நாட்டு வெடிகுண்டுடன் இருந்த குட்டி ரவுடிகளை கைது செய்த போலீஸ்