போனி கபூர் - ஹெச். வினோத் - அஜித் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான துணிவு படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்றது.




வினோத் சார் பேசவே மாட்டார் :  


துணிவு திரைப்படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இப்படத்தில் நடித்த அனுவபம் குறித்தும் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியிருந்தார் நடிகை மஞ்சு வாரியர்.


அவர் கூறுகையில் " வினோத் சார் படங்கள் அனைத்தையும் நான் மிகவும் ரசித்து பார்த்துள்ளேன். அவருடைய படத்தில் நான் நடிக்கப்போவதை நினைத்து மிகவும் எக்சைட்டட்டாக ஃபீல் செய்தேன்.


படப்பிடிப்பில் நான் அவரை பார்த்ததை வைத்து சொல்ல வேண்டும் என்றால் இந்த பாடத்தை தாண்டி அவர் வேறு ஏதாவது பேசவோ அல்ல யோசித்ததோ கூட கிடையாது. அவர் என்ன பேசினாலும் இந்த படத்திற்கு தேவையான விஷயங்கள் அதை சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றி மட்டுமே பேசி நான் பார்த்துள்ளேன். அந்த அளவிற்கு அவர் படத்தின் மீது அத்தனை ஈடுபாடு கொண்டு இருப்பர்.


அவருடைய ஃபோகஸ் எந்த இடத்திலும் சற்றும் விலகாமல் அர்ப்பணித்து வேலை செய்வார். அவர் மிகவும் குறைவாகவே பேசுவார் ஆனால் அவருடைய படங்கள் அவரை பற்றி பேசும். அப்படி ஒரு மனிதரின் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கையில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்". 






கனிவாக பழகுங்கள் :


நீங்கள் எப்போவுமே சாந்தமாக அமைதியாக இருப்பதற்கான சீக்ரெட் பற்றி சொல்ல முடியுமா என கேட்டதற்கு "நான் பொறுமையாக அமைதியாக இருக்கிறேன், நன்றாக பழகுகிறேன் என பலரும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னையே இப்படி சொன்னால் அப்போ அஜித் சார் பார்த்த நீங்க என்ன சொல்வீங்க. அவரை பார்த்ததற்கு பிறகு நான் ஒண்ணுமே இல்லை என தோன்றுகிறது. அவர் ஒவ்வொருவரிடமும் எப்படி பேசுகிறார், கனிவாக பழகுகிறார், மரியாதை கொடுக்கிறார் என்பதை எல்லாம் பார்க்கும்போது நான் இன்னும் பல கிலோ மீட்டர் அடி கீழே இறங்கி டவுன் டு எர்த் நபராக மாற வேண்டும் என தோன்றுகிறது.


அவர் யாரிடமும் இப்படி இருக்க வேண்டும் என சொல்வதில்லை ஆனால் அவர் மற்றவர்களிடம் நடந்து கொள்வதை பார்த்தே நான் கற்று கொண்டேன். அந்த அளவிற்கு ஒரு தன்மையான மனிதர் அஜித் சார். இப்படி அமைதியாக, பொறுமையாக இருப்பதற்கு சீக்ரெட் எல்லாம் ஒன்றும் கிடையாது. அனைவரிடத்திலும் அன்பாக, சந்தோதமாக, மற்றவர்களை காயப்படுத்தாமல் இருந்தாலே போதுமானது. அப்படி இருந்தாலே உங்கள் வாழ்க்கை அமைதியானதாக இருக்கும். 


 



துணிவு என்ன மாதிரி படம்?


துணிவு என்ன மாதிரியான படம் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "துணிவு திரைப்படத்தை ஒரு முழுநீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். அஜித் சார் ரசிகர்கள் அவரை எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களோ அது அத்தனையும் அந்த படத்தில் இருக்கும். ஆக்ஷன் மட்டுமின்றி அதில் ஒரு கதை உள்ளது.


ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற நியாயங்கள் இருக்கும். துணிவு டிரைலரை பார்த்த பிறகு அஜித் நல்லவரா கெட்டவரா என்று ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர். நீங்கள் அந்த டீம்மா அல்லது இந்த டீம்மா என்றெல்லாம் கேட்டார்கள். அது பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு வாரம் பொறுத்து இருந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். என்ன பண்றாங்க... அது எதுக்கு பண்றாங்க.. என்பதுதான் இந்த படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ். நீங்கள் படம் பார்த்து அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் நடிகை மஞ்சு வாரியர்.