தமிழ் சினிமாவில் சவுத் குயின் (south queen) என அழைக்கப்படும் நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே கலக்கி வருகிறார். இன்றும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா தான் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட வேண்டும் என சில விவாதங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வந்தது. 


கடந்தாண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கலக்கிய பிறகு,  சமீபத்தில் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய திரைப்படமான ராங்கி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. 


 




சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை திரிஷா இது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். திரிஷா கூறுகையில் "எந்த ஒரு ஹீரோயினும் மற்ற ஹீரோயின்களோடு மிகவும் நெருக்கமாகவோ அல்லது உயிர் தோழிகளாகவோ பழகுவது கிடையாது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் அதில் பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்ததால் நெருங்கி பழக முடிந்தது. ஆனால் பெரும்பாலும் மல்டி ஸ்டாரர் ஹீரோயின்களாக படத்தில் நடிப்பது என்பது மிகவும் அரிது. அப்படி ஒரு படம்  கிடைத்தாலாவது ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழக வாய்ப்புகள் இருக்கும்.  






 


அந்த வகையில் நயன்தாராவையும் ஏதாவது ஒரு விருது வழங்கும் விழா அல்லது குரூப்பாக எங்காவது செல்வது போல வாய்ப்பு அமைந்தால் மட்டுமே ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி கொள்வோம். அந்த சமயங்களில் பேசினால் கூட சினிமா சம்பந்தமாக பேசுவது கிடையாது. ஜெனரல் விஷயங்களை பற்றி மட்டுமே பேசிக்கொள்வோம். எங்களை  பற்றியும் எங்களின் குடும்பம் பற்றியும் மட்டுமே பேசிக்கொள்வோம் தவிர ஒரே வார்த்தை கூட சினிமாவை பற்றியோ அல்லது சினிமாவில் இருக்கும் போட்டி குறித்தோ நாங்கள் பேசியதே இல்லை. எங்களுக்குள் ஒரு அன்பான உறவு மட்டுமே இருக்குமே தவிர போட்டியோ அல்லது பொறாமையோ இருக்காது” என நடிகை திரிஷா கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் "மிகவும் நெருக்கமான தோழிகளாக பல நாட்கள் இருந்த பின்னர் அவர்களுக்குள் பிரிவோ அல்லது சண்டை  ஏற்பட்டால் மட்டுமே பிரிந்து விட்டார்கள் என சொல்ல முடியும். அந்த வகையில் எந்த ஒரு ஹீரோயினுடனும் எனக்கு அது போன்ற ஒரு நெருக்கமான உறவு இருந்ததில்லை” என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.