தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் அடியாட்களை ஏர்பாடு செய்து மகனை பெற்றோரே கொன்ற கொடூரம் நடந்துள்ளது.


இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம், சூர்யபேட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி சாய் ராம் என்ற 26 மதிக்கத்தக்க இளைஞர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.


அரசு பள்ளியில் முதல்வராக இருக்கும் தந்தையும், தாயும் அடியாட்களை ரூ.8 லட்சம் கொடுத்து ஏற்பாடு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகள் 5 பேரில் நால்வரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்துள்ளனர். ஒரு நபர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.


கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய சாய் ராம் (26) என்பவரின் உடல் அக்டோபர் 18ஆம் தேதி சூர்யபேட்டையில் வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் அந்தப் பகுதியில் இருந்து கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட  கார் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.


மகன் காணாமல் போனதாக புகாரையும் அவரது பெற்றோர் அளிக்கவில்லை. மகனின் உடலை அடையாளம் காண்பதற்காக பிணவறைக்கு வந்தபோது அதே காரில் பெற்றோர் வந்ததும் போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மகன் குடிப்பதற்காக தொடர்ந்து பணம் கேட்டு அடித்ததாகவும், இதையடுத்து மகனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரும் மையத்தில் சேர்த்தகாவும் தெரிவித்தனர்.


ஆனால், மகன் குடிப்பழக்கத்தின் கோரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து பெற்றோரை மகன் அடித்து துன்புறுத்தியிருக்கிறார். இதனால், அதிருப்தி அடைந்த பெற்றோர் ராணி பாய் என்பவரின் சகோதரர் சத்யநாராயணாவின் உதவியை நாடியிருக்கின்றனர்.


சத்யநாராயணா, ஆர்.ரவி, டி.தர்மா, பி.நாகராஜு, டி.சாய், பி.ராம்பாபு ஆகியோர் சாய்ராமை கொலை செய்தனர். மகனை கொல்வதற்கு ரூ.1.5 லட்சம் முன்பணமாகவும், மீதிப்பணம் ரூ.6.5 லட்சத்தை 3 நாட்கள் கழித்து கொடுக்க ஒப்புக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.


கடந்த மாதம் 18ம் தேதி சத்யநாராயணாவும், ரவியும் சாய் ராமை காரில் கல்லேபள்ளி பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அனைவரும் மது அருந்தியிருக்கின்றனர். மது போதையில் இருந்த சாய் ராமின் கழுத்தை கயிற்றால் இறுக்கி அந்த நபர்கள் கொலை செய்தனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூரில் மயிலின் சிகிச்சைக்காக போராடும் பைக் மெக்கானிக் - தீர்வு கிடைக்குமா?


முன்னதாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஆடு விற்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 65 வயதுடைய பெண்ணை கட்டையால் அடித்து கொலை  செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (65). திருமணமாகாதவர். இவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே ஆடு விற்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன் ஆத்திரம் அடைந்த  நிலையில் அங்கிருந்த கட்டையை எடுத்து அழகம்மாளை சரமாரியாக தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.