சட்ட விரோதமாக மது, கள் விற்ற 7 பேர் கைது.


கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டம் மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலை போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்ஐ அழகு ராம் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் எஸ்ஐக்கல் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் கரூர் லாலாபேட்டை சின்னதாராபுரம் வெங்கமேடுவாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக செல்வராஜ் வயது 40, வசந்தா வயது 70, கார்த்திக் வயது 3,1 பிரியா வயது 40, ஸ்டாலின் வயது 29, சரவணன் வயது 48 , சோழியப்பன் வயது 65 என மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 51 மது பாட்டில்கள் மற்றும் ஒரு லிட்டர் கல் பறிமுதல் செய்யப்பட்டன.




இளைய மாணவரை தாக்கிய மூத்த மாணவர் மீது வழக்கு.


கரூர் அரசு கலைக்கல்லூரியின் இளங்கலை படித்து வரும் மாணவரை தாக்கிய முதுகலை மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேவாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் வயது 19. கரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு பேருந்து மூலம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தரகம்பட்டி யூனியன் ஆபீஸ் பேருந்து நிலையம் அருகே, அதே கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் கார்த்திகேயன் வயது 21. விமல் ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இது குறித்து விமல்ராஜ் கொடுத்த புகாரின்படி சிந்தாமணிப்பட்டி போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.




மயிலுக்கு சிகிச்சை கிடைக்குமா? பைக் மெக்கானிக் வேதனை.


கிருஷ்ணராயபுரம் அருகே, வளையர்பாளையம் கரூர் -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இறை தேடிக் கொண்டிருந்த நமது தேசிய பறவையான மயில், எதிர்பாராமல் வாகனத்தில் மோதி காயமடைந்துள்ளது. இதை பலர் வேடிக்கை பார்த்து சென்றுள்ளனர். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 48. இவர் கிருஷ்ணராயபுரத்தில் பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளார். காயமடைந்த மயிலை மீட்டு அருகில் உள்ள, அவரது வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீர் கொடுத்துள்ளார். உடனடியாக கிருஷ்ணராயபுரம் கால்நடை மருத்துவமனைக்கு, மயில் ஒன்று ரோட்டில்  அடிபட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தகவல் கொடுத்துள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவ பணியாளர் டாக்டர் தற்போது இல்லை, வந்ததும் சொல்கிறேன் என கூறினார். பிறகு கரூர் வனசரகத்துறை  அலுவலக தொலைபேசிக்கு தொடர்பு கொண்டதில், வனத்துறை அலுவலகத்தில் அலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ராஜேந்திரன் அடிபட்ட மயிலுக்கு வாழைப்பழம் மற்றும் தானியங்கள் கொடுத்துள்ளார். ஆனால், மயிலுக்கு பின்பக்கத்தில் பலத்த அடிபட்டது. அதனால் சரியாக தண்ணீர் மற்றும் இரை கூட ரெண்டு நாட்களாக எடுக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால், என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்பி வருகிறார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபட்ட மயிலுக்கு தேவையான சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கூறுகின்றனர்.