திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக 51 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் துரோகி  முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் வெள்ளிக் கவசத்தை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலே வழங்குவதாக தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்தை, திண்டுக்கல் சீனிவாசன் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம். ஆனால் அதைவிட கேவலமாக உங்களிடம் யார் வெள்ளிக்கவசம் கேட்டது என பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Kanchipuram Lakes : ஒரே இரவில் இத்தனை ஏரிகள் நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ




அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பழனி சாலையில் திண்டுக்கல்  மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்.


Salt Water Gargling : ரொம்ப முக்கியம் மக்களே.. உப்பு நீரால் வாய் கொப்பளித்தல் இப்போ ஏன் முக்கியம்.. அலர்ட்..




தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை மாட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை ஆனால் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த தெய்வீக பொன் கலசத்தை முத்துராமலிங்கருக்கு சாத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.




ஜெயலலிதா கொடுத்த அந்த தெய்வீக பொன் கவசம் முத்துராமலிங்கத் தேவருக்கு போய் சேர வேண்டும் என எடப்பாடி கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவில் வெள்ளியிலே கவசத்தை கொடுத்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையிலே நான் வழங்குகிறேன் என துரோகி சொல்லி இருக்கிறார் என ஓ பன்னீர் செல்வத்தை சாடை பேசினார். மேலும் ஜெயலலிதா கொடுத்த தங்கத்திற்கு ஈடு வேறு என்ன இருக்கிறது? எண்ணத்திற்கு வெள்ளியில் கொடுக்கிறாய், கொள்ளையடித்த பணத்தில் வைரத்தில் ஆவது கொடு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சாத்தப்பட்டு இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைப் போன்று முத்துராமலிங்கத் தேவருக்கும் தான் திருடிய பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் வைரத்தில் கவசத்தை வழங்கு, ஆனால் தற்பொழுது அதைவிட கேவலமாக வெள்ளியிலே முத்துராமலிங்க தேவருக்கு கவசம் வழங்க வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது? நீங்கள் என்ன தேவருக்கு வாரிசா என பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண